அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மேலும் தெளிவுபடுத்துவது அவசியமானதனால் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டமூலத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.