இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மாபா பத்திரண ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
எனவே, ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.