2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது.
தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவற்றை சரிசெய்ய சாத்தியமா என்பது குறித்து ஆராயப்படுகின்றது.
பல தசாப்தங்களாக கடல் மட்ட உயர்வு தவிர்க்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவிக்கும் அதேவேளை சொத்துக்களையும் காப்பாற்ற முடியாது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இங்கிலாந்தின் கடற்கரையில் மூன்றில் ஒரு பங்கு கடல் மட்ட உயர்வினால் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று அறிக்கை கூறுகிறது.