கொழும்பு – வோர்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, எதிர்ப்பாளர்கள் அரச நிறுவனங்களுக்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்தால் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் தேவையான நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு சட்டப்பூர்வ தகுதி இருப்பதாக தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் துன்புறுத்தப்படவோ அல்லது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், பல வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்குமாறு கோரி கறுவாத்தோட்டப் பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.