மக்களின் போசாக்கு நிலை தொடர்பில் ஆய்வு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியினால் மக்களின் போசாக்கு நிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்த துல்லியமான தரவுகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஊட்டச்சத்து அளவு படிப்படியாக குறைவடைந்து வருகின்றமை தெரியவந்துள்ளது.