மேல் மாகாணத்தில் 10 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் குடம்பி ஆய்வு பிரிவின் உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நுளம்பின் முட்டை ஒரு வருடத்திற்கும் மேலாக வறண்ட சூழலில் இருக்கும் எனவும், குறித்த பகுதியில் தண்ணீர் நிரம்பும் போது நுளம்புகள் 8 முதல் 10 நாட்களுக்குள் உற்பத்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கு விடப்படும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் போத்தல்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.