ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட உக்ரைன் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையை தொடங்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வந்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனுக்கு சென்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அங்கு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உரையாடிய போது இந்த வாக்குறுதியை அளித்தார்.
இதன்போது பிரதமர் பொரிஸ் கூறுகையில், ‘இன்றைய எனது வருகை, இந்தப் போரின் ஆழத்தில், உக்ரைனிய மக்களுக்கு ஒரு தெளிவான மற்றும் எளிமையான செய்தியை அனுப்புவதாகும். பிரித்தானியா உங்களுடன் உள்ளது, இறுதியில் நீங்கள் வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுடன் இருப்போம்’ என கூறினார்.
போரில் நிரூபிக்கப்பட்ட பிரித்தானிய இராணுவ நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உக்ரைனின் ஆயுதப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. உக்ரைன் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், நிகழ்ச்சியை நடத்த சர்வதேச கூட்டாளர்கள் அழைக்கப்படுவார்கள்.
முந்தைய ‘ஆபரேஷன் ஆர்பிட்டல்’ 2015ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பு வரை 22,000க்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளித்தது. புதிய திட்டம் நாட்டிற்கு வெளியே உள்ள படைகளுக்கு பயிற்சி அளிக்கும்.
ஏழு வருட வேலைத்திட்டத்தின் போது கற்பிக்கப்பட்ட போரில் வெற்றிபெறும் திறன்கள், உக்ரைனியப் படைகளுக்கு ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் தூண்டப்படாத படையெடுப்பிற்கு எதிராக ஒரு மூர்க்கமான பாதுகாப்பைத் தொடங்க உதவியது.