நாட்டில் மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணம் கடந்த காலங்களில் தேவையான அளவு டொலர்கள் வழங்கப்படாமையே என முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த டொலர்களை வழங்குவதாக பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்த போதிலும் அதனை வழங்கவில்லை என அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, மருந்து ஏற்றுமதி தொடர்பான சட்டமூலங்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.