ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஒருவாரம் இலங்கையில் தங்கியிருந்த குறித்த பிரதிநிதிகள் குழு, ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு கொள்கைப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தது.
பிரதமர், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் பொருளாதார நிபுணர்கள் உட்பட தாம் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவர்கள் விளக்கமளித்தனர்.
தமது கொள்கைகளுக்கு இலங்கை இணங்குவதால், இந்த கடினமான காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியம் ஆதரவை வழங்க உத்தேசித்துள்ளதாக குறித்த தூதுக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நிலவும் பொருளாதார நிலைமைகளை விரிவாக எடுத்துரைத்ததுடன், கடினமான காலத்தில் இலங்கைக்கு ஆதரவளித்த சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி பாராட்டும் தெரிவித்தார்.