நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
அலுகவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதும், அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.