டீசல் இன்மையால் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
துரதிஷ்டவசமாக மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கே இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் கிடைக்கப் பெற்றது.
இதன்காரணமாக உரிய வகையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று முதல் போதியளவு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை பாதிக்கப்படாது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.