மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில், பொதுமக்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று(செவ்வாய்கிழமை) முதல் 3 வாரங்களுக்கு, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், பொதுமக்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள், இன்று முதல் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.