எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர் உள்ளிட்ட முத்தரப்பு ஒப்பந்தமாக இன்றைய தினம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சம் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளுக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியினால் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் லிட்ரோ நிறுவனத்தினால் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை எரிவாயுவானது நான்கு மாதங்களுக்கு போதுமானதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.