இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு செல்லவுள்ளது.
அங்கு இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, குறித்த குழு அங்கு செல்லவுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், 653 பேர் மீளவும் மீட்கப்பட்டதுடன், 70 பேரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.