கோட்டை ரயில் நிலையத்தில் இன்று பல ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் சேவையில் ஈடுபட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
அத்தோடு, ரயில் நிலையத்திலும் பெருமளவிலான மக்கள் ரயிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கோட்டையில் இருந்து ரம்புக்கனை, மீரிகம மற்றும் வயங்கொட வரை பிரதான பாதையில் இயங்கும் பல அலுவலக ரயில்களும் ஹலவத்தை, பாணந்துறை, வாதுவ ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பல ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்து கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படும் உதயாதேவி ரயில் மற்றும் அவிசாவளை வரை செல்லும் சரக்கு ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.