சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியின் போது, பொருளாதார, சமூக மற்றும் கலாசாரத் துறைகளில் வலுவான இருதரப்பு உறவைப் பேண ஜப்பானின் விருப்பத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதன்போது, இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு தான் தூதுவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Met with the Ambassador of #Japan to #LKA Hideaki Mizukoshi today. I thanked him for the assistance given by the Japanese gvt. during this crisis. He reiterated Japan’s willingness to maintain a robust bilateral relationship in the economic, social & cultural spheres. pic.twitter.com/GmKOCiCqyG
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 1, 2022