உக்ரைனில் ஒடெசா பிராந்தியத்தில் துறைமுக நகரான செர்ஹீவ்கா நகரிலுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19பேர் உயிரிழந்துள்ளதோடு, 38பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒடெசா நகருக்கு 50 கி.மீ. தொலைவிலுள்ள செர்ஹீவ்கா நகரில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்பு சேவை அமைப்பு தெரிவித்தது.
இது தவிர, தாக்குதலில் மேலும் 38 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 6 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தப் பகுதியில் மூன்று எக்ஸ்-22 வகை ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.