இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான, கொவிட் தொடர்பான நோய் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான சிறப்பு ஊதிய விடுப்பு, அடுத்த வாரம் இரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் ஊழியர்கள் வழக்கமான ஒப்பந்தப்படி நோய்வாய்ப்பட்ட ஊதிய ஏற்பாடுகளுக்குத் திரும்புவார்கள்.
இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக ரோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் கவலை வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் கொவிட் உடன் வாழக் கற்றுக் கொள்வதன் ஒரு பகுதியாகும் என்று சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கொவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
மதிப்பிடப்பட்ட 2.3 மில்லியன் மக்கள் அல்லது 30இல் ஒருவருக்கு வைரஸ் உள்ளது. இது முந்தைய வாரத்தில் 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.