நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளை கேட்பதற்கு பிற்பகல் 3.30 kzp வரை முழு நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வாரத்தின் இறுதி நாடாளுமன்ற நாளான ஜூலை 6ஆம் திகதி காலை 10 மணி தொடக்கம் 10.30 மணிவரை பிரதமரிடம் கேள்விகள் கேட்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், ‘நாட்டின் தற்போதைய நிலைமை’ குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின்படி, சபை ஒத்திவைப்பு விவாதம் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.