ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அமெரிக்காவில் மாத்திரமே பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவது என்பது அந்த நாடுகளின் வேலை எனவும் அவர் கூறியுள்ளார்.