பொரிஸ் ஜோன்ஸன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முதலாவதாக, அந்தப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். சூயலா பிரேவ்மேன் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக, கொரோனா தடுப்புக் குழு துணைத் தலைவர் ஸ்டீவ் பேக்கரும் அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமர். பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இது தவிர, நிதியமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, சஜித் ஜாவித் மற்றும் ஜெர்மி ஹண்ட் ஆகியோர் ஏற்கனவே நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்கள் இந்த முறையும் போட்டியிட வாய்ப்புண்டு.
அதேபோல, வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டண்ட், வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ், வெளியுறவு விவரங்கள் குழு தலைவர் டாம் டுகெந்தாட், பாதுகாப்பு செயலர் பென் வாலேஸ், கருவூலர் நாதிம் ஸகாவி’, அட்டர்னி ஜெனரல் ஸ்வெல்லா ப்ரேவர்மேன் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
அவரைத் தவிர, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வாக்கெடுப்பு திகதிகளை கன்சர்வேட்டிவ் கட்சியின் சக்திவாய்ந்த ‘1922 குழு’ அடுத்த வாரம் அறிவிக்கும். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ரகசிய வாக்கெடுப்புகளில், கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும், அதில் இறுதியாக வெற்றி பெறுபவர், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார்.