இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பகுதியில் தெரிவித்துள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையும் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Spokesperson of Ministry of External Affairs of India clearly stated today that India stands with the people of Sri Lanka as they seek to realize their aspirations for prosperity&progress through democratic means&values, established institutions&constitutional framework.(2/2)
— India in Sri Lanka (@IndiainSL) July 10, 2022