தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், அங்கிருந்த இளைஞர்கள் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்கள் அங்கிருந்து வெள்ளை நிற மினி பஸ்ஸில் தப்பிச் சென்றனர்.
தாக்குதலுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது.
சம்பவ இடத்தில் 23பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11பேர் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குறைந்தது மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதால், அவர்களை கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.