3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய இந்த எரிவாயு கையிருப்பு கொழும்பு துறைமுகத்தைச் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் வருகையின் பின்னர் அதன் நிலைமையை பரிசோதித்து தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த உடன்படிக்கைக்கு அமைய, 3,700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததுடன், அங்கு தரையிறங்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 3,200 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மூன்றாவது கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதுடன், இம்மாதம் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.