பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்பதாக, வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
டெய்லி டெலிகிராப்பில் தனது திட்டங்களை அறிவித்த ட்ரஸ், ‘முதல் நாளிலிருந்தே வரிகளை குறைக்கத் தொடங்குவதாக’ உறுதியளித்தார்.
46 வயதான ட்ரஸ், நிறுவன வரி அல்லது வாணிபக்கழக வரியை குறைக்கவும், தேசிய காப்பீட்டு உயர்வை மாற்றவும் மற்றும் வணிக வீதங்களை சீர்திருத்தவும் ஒப்புக்கொண்டார்.
கன்சர்வேடிவ்கட்சித் தலைவராக வர விரும்பும் 11 தலைமைத்துவ நம்பிக்கையாளர்களில், பலர் வரித் திட்டங்களைத் தங்கள் திட்டங்களின் முக்கிய அங்கமாக அமைத்துள்ளனர்.
போட்டிகளை ஏற்பாடு செய்யும் ‘1922 பின்பெஞ்ச் டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு’, தலைமைப் போட்டியின் கால அட்டவணை மற்றும் விதிகளை முடிவு செய்ய இன்று (திங்கட்கிழமை) கூடுகின்றனர்.
போட்டியாளர்கள்!
முன்னாள் சமத்துவ அமைச்சர் கெமி படேனோக்
அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிராவர்மேன்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ரெஹ்மான் சிஷ்டி
முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட்
முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்
வர்த்தக அமைச்சர் பென்னி மோர்டான்ட்
போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ்
முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்
வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ்
பின்வரிசை உறுப்பினர் டாம் துகெந்தட்
திறைசேரியின் தலைவர் நாதிம் ஜஹாவி