அமைச்சர்களின் இராஜினாமாக்கள் ஜனாதிபதியினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் அவர் அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் தம்மிக்க பெரேரா ஆகியோர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.