ஹொங்கொங் ‘சாம்பலில் இருந்து மீண்டும் எழுந்துள்ளது’ என்று உலகம் நம்ப வேண்டுமென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் விரும்பினார்.
ஆனால் காலத்தில் செழித்துக்கொண்டிருந்த தீவை சீன பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படைகளின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதை தான் அனைவரும் அவதானித்துள்ளனர்.
ஹொங்கொங் தீவை பிரிட்டன் ஒப்படைத்ததன் 25ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஜுலை முதலாம் திகதி அதனை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி ஷி ஹொங்கொங்கிற்கு நேரடியாக விஜயம் செய்து அதில் பங்கேற்றிருந்தார்.
அவர் தேசப்பற்று மற்றும் செழிப்பான ஹொங்கொங்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டிருந்தபோதும் அதனை யாரும் பெற முன்வந்திருக்கவில்லை.
அங்கு ஸ்திரத்தன்மை உள்ளதாக காண்பித்து புதிய சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கு முயன்றார். ஆனால் எல்லோரும் ஹொங்கொங்கில் வர்த்தகத்தின் அரசியல் அபாயங்களை முற்கூட்டியே அறிந்திருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ஷி ஹொங்கொங் தீவில் வந்திறங்கிய அன்று, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா மாவட்டங்கள் பாதுகாப்பு கோட்டைகளாக மாற்றப்பட்டன.
தீவின் பல பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. சீனப் படைகள் ஏற்கனவே ஹொங்கொங்கில் நிலைநிறுத்தப்பட்டு, இருக்கும் நிலையில் மிகக் கடினமான மற்றும் மிகவும் சிக்கலான நிலைமைகளில் போருக்கு தயாராக இருப்பது போன்றே தோற்றமளித்திருந்தன.
குறித்த தினமன்று, அனைத்து ஜனநாயக ஆர்வலர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் மூலம் கருத்துச் சுதந்தரம் அடக்கப்பட்டிருந்தது.
பல எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் ஏற்கனவே சிறையில் இருப்பதோடு நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒரு போராட்டம் கூட ஏற்பாடு செய்யப்படாத வகையில் தடைகள் காணப்பட்டன. இந்நிலையில் தான் முதலாவது ஆண்டு விழா சீனா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் இருந்து குறைந்தது 10ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, பிரான்ஸ்-பிரஸ் மற்றும் ரொய்ட்டர்ஸ் உட்பட்டவை பாதுகாப்பு கவலைகள் காரணமாக அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் இருந்து தடை செய்யப்பட்டதாக ஹொங்கொங் பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரதத்தின் மூலமாக ஹொங்கொங்கிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ஷியை வரவேற்பதற்காக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளும் பள்ளிமாணவர்களும் அதிவேக புகையிரத முனையத்திற்க வரவளைக்கப்பட்டதோடு அவர்கள் கை அசைத்து கோசமிட்டபடி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பிறகு சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே ஜனாதிபதி ஷி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அவர் ஜனாதிபதிக் காலத்தின் தனது முதல் தசாப்தத்தை முடித்துள்ளதோடு சில மாதங்களில் சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்கத் தயாராக உள்ளார்.
ஹொங்கொங்கில் கொடூரமான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் ஜனநாயக மற்றும் சுதந்திரத்திற்கு ஆதரவான போராட்டங்களை கட்டுப்படுத்தியுள்ளமையானது ஜனாதிபதி ஷியின் ஒரு வகையான அரசியல் வெற்றியைக் குறிக்கிறது.
ஹொங்கொங்கிற்கு ஒரு ‘புதிய தசாப்தத்தை’ அறிவிக்கவும், நகரத்திற்கு புதிய முன்னுரிமைகளை வெளிப்படுத்தவும் ஜனாதிபதி ஷி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினார்.
அரசியல் விசுவாசம், சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவை ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம் மற்றும் செழிப்பான சமூகம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துவதும் அவருடைய நோக்கமாக இருந்தது.
இதேநேரம், ஹொங்கொங்கில், ஜனாதிபதி ஷி ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ கொள்கையை வெளிப்படுத்தியிருந்தார். இதனை அனைவரும் பாராட்டினார், மேலும் அந்தக்கொள்கை ‘நீண்ட காலத்திற்கு’ நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், ஜனாதிபதி ஷியின் உரையும், ஹொங்கொங்கின் புதிய தலைமை நிர்வாகி ஜோன் லீயின் உரையும், ஹொங்காங் பீஜிங்குடன் இணைந்து செல்வதை விடவும் அதன் தனித்துவத்தை தொடர்ச்சியாக பேணுவதிலேயே அதிக அளவில் வலியுறுத்துவதாக இருந்தது.
தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இங்கிலாந்தால் ஹொங்கொங் ஒப்படைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைப்பு வேகமெடுத்து வருகிறது.
‘ஹொங்கொங் சீன நாட்டின் நலனுடன் ஒத்துப்போக வேண்டும்,’ என்று ஹொங்கொங் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் தனது பார்வையாளர்களிடம் ஜனாதிபதி ஷி கூறினார்,
ஹொங்கொங்கில் புதிய தசாப்தத்தில், தேசபக்தியும் விசுவாசமும் அடிப்படையாக உள்ளன. சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், 2020இல் தேசிய பாதுகாப்புச் சட்டம் பீஜிங்கின் அரசியலுக்கு இணங்குபவர்களால் நகரம் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான செயல்முறையின் தொடக்கமாக இருந்தது.
ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகியாக முன்னாள் பாதுகாப்பு துறைசார்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு வலுவான அறிகுறியாகும்.
ஜனாதிபதி ஷி ஹொங்கொங்கின் எதிர்காலம் பற்றிக் குறிப்பிடுகையில், ‘மிகுந்த கொந்தளிப்புக்கு பிறகு, ஹொங்கொங் ஒழுங்கற்றதாக தொடர்ந்தும் இருக்க முடியாது, மக்கள் வேதனையான பாடத்தை கற்றுக்கொண்டனர்.
பிரதேசம் இப்போது ஸ்திரத்தன்மைக்கு மாறியுள்ளது. ஆகவே ஸ்திரத்தன்மையிலிருந்து செழிப்படைய வேண்டிய பயணத்தை அடுத்து மேற்கொள்ளவுள்ளது’ என்றார்.
அத்துடன், ஹொங்கொங்கின் நீடித்த வளர்ச்சிக்கான சீனாவின் திட்டத்தில் நம்பிக்கை வைப்பதற்கு வெளிநாட்டு வணிகங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், குறிப்பிட்டார்.
இருப்பினும், சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இப்போது ஹொங்கொங்கில் தங்கள் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ஹொங்கொங்கின் வணிகச் சூழல் வெளிநாட்டுத் திறமையாளர்களை ஈர்ப்பதில் 2021ஐ விட மோசமானதாக இருந்தது என்று ஜேர்மன் வணிக நம்பிக்கைக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஹொங்கொங்கில் உள்ள நிறுவனங்களில் கிட்டத்தட்ட 33சதவீதமவை அடுத்த 12மாதங்களில் பகுதி அல்லது முழுமையான இடமாற்றம் பற்றி பரிசீலிக்கவுள்ளன.
ஆசியாவின் வணிக நட்பு நகரங்களில் ஒன்றாக இருந்த ஹொங்கொங்கின் நம்பிக்கையின் வீழ்ச்சியானது மேற்குத்தலைநகர்களின் மனநிலையை மேலும் உயர்த்துவதாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.