நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.
இலங்கையில் ஏற்பட்ட பாரிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து செய்வதில் எதிர்கொண்ட இடர்பாடுகளை கருத்தில்கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.
பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகயிருந்தபோதிலும் சில பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகளவில் காணப்பட்டதாக கல்வித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவசரகால நிலையின் கீழ் ஆசிரியர்களுக்கு எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுக்கவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.