முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரி சர்வதேச அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
2009 உள்நாட்டுப் போரின் போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக அவரது நடவடிக்கை சட்டவிரோதமானதாக இருந்தது என குறிப்பிட்டே இந்த முறைப்பாடுமுன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போரின் போது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ ஜெனிவா உடன்படிக்கைகளை பாரியளவில் மீறியுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.