மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ரஷ்யாவின் எச்சரிக்கையால் ஒவ்வொரு ஐரோப்பியரின் வாழ்க்கையையும் மோசமாக்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் விளைவாக குளிர்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய ஏழை மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், குளிர்காலத்திற்குத் தயாராகும் ஐரோப்பாவை இது வேண்டுமென்றே கடினமாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.
ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாயத்திட்டத்தின் ஊடாக ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயு ஓட்டத்தை தற்போதைய அளவில் பாதிக்கு குறைப்பதாக திங்களன்று, அறிவித்தது.
ஆனால், ஜேர்மன் அரசாங்கம் விநியோகத்தை கட்டுப்படுத்த எந்த தொழில்நுட்ப காரணமும் இல்லை என்று கூறியுள்ளது.