நாட்டின் அணுசக்தி போர் தடுப்பு அதன் முழுமையான பலத்தை உண்மையாகவும் துல்லியமாகவும் உடனடியாகவும் அதன் பணிக்கு அணிதிரட்ட முழுமையாக தயாராக உள்ளது என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் ‘வெற்றி நாள்’ என்று அழைக்கப்படும் கொரியப் போரில் சண்டையை முடித்த போர் நிறுத்தத்தைக் குறிக்கும் உரையில், கிம் ஜோங் உன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குவட கொரியா தனது பாதுகாப்பைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.
எந்தவொரு நெருக்கடிக்கும் பதிலளிக்க தங்கள் ஆயுதப்படைகள் முழுமையாக தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தென்கொரியா மற்றும் அமெரிக்காவில்; உள்ள அதிகாரிகள் வட கொரியா 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது முதல் அணுசக்தி சோதனையை நடத்துவதற்கான தயாரிப்புகளை முடித்துவிட்டதாக கூறியதை அடுத்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.
வட கொரியா சோதனையை முன்னெடுத்தால், அதன் சைபர் தாக்குதல் திறன்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் உட்பட வலுவான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
கிம் தனது உரையில், போருக்குப் பிறகு சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நாட்டிற்கு எதிராக தென் கொரியாவுடன் ஆபத்தான, சட்டவிரோத விரோதச் செயல்களை அமெரிக்கா தொடர்கிறது எனவும் அதை பேய்த்தனமாக காட்டி அதன் நடத்தையை நியாயப்படுத்த முயல்கிறது எனவும் கூறினார்.