• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

நாடாளுமன்ற அமர்வினை இன்று ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/03
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
48
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் நாடாளுமன்ற  படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக நாடாளுமன்ற  முன்றலில் முப்படையினரும் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையளிக்கவுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என்பதுடன், தேசியக் கொடி மாத்திரம் ஏற்றிவைக்கப்படும்.

இன்று காலை 09.30 மணிக்கு விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், இதில் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் முதலில் வருகை தருவர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன  வருகையும், அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவின்  வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையும் இடம்பெறும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற  செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.

இங்கு முப்படையினர் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல  சபாநாயகர், நாடாளுமன்ற  செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற  கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி காலை 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர்.

சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார்.

இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலட்சினைக்குப் பதிலாக அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற  குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.

சபை ஒத்திவைக்கப்பட்டதும் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முதற்பெண்மணி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: நாடாளுமன்ற அமர்வுஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார் ஜனாதிபதி ரணில்!

Next Post

வெளியிடப்படுகின்றது உயர்தர பரீட்சை பெறுபேறு!

Related Posts

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

2026-08-27
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!
இலங்கை

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

2026-08-27
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!
ஆசிரியர் தெரிவு

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
ஆசிரியர் தெரிவு

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

2026-08-27
நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!
இலங்கை

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

2026-08-27
இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

2026-08-27
Next Post
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

வெளியிடப்படுகின்றது உயர்தர பரீட்சை பெறுபேறு!

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய டீசல் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர்

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

0
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

0
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

0
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

0
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து மகளிர் அமைச்சு எச்சரிக்கை!

2026-08-27
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

2026-08-27
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

2026-08-27
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.