வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படவுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் குறித்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாடளாவிய ரீதியில் நளை வரை மூன்று மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏ முதல் வை வரையான வலயங்களில் இவ்வாறு 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த வலயங்களில் நண்பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.