மின்சாரம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் விநியோக சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் மற்றும் அது சார்ந்த பிரிவுகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டு குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.