நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காத குடும்பங்களுக்கு அவற்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காதவர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரையில் உறுதியளித்தார்.
இந்நிலையில் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.