முறையான தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காணும் விசேட செயலியொன்று எதிர்வரும் இரு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயலி இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்ததாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமாகியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கணினி செயலி ஊடாக மது போத்தல்களில் ஒட்டும் ஸ்டிக்கரைக் கொண்டு, நுகர்வோர் அனைத்து விபரங்களையும் அதை உற்பத்தி செய்த உற்பத்தியாளரிடம் இருந்து தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலி மதுபானங்களை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு ஏற்கனவே இந்த கணினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.