விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.