பல்வேறு நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சந்துஷ் சேனாபதி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அத்தகைய மருந்துகளை வழங்கக்கூடிய தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் இருந்தால், தயவு செய்து உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
பல்வேறு நீண்ட கால நோய்களுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே மாதிரியாக கொடுக்காமல் இருந்தால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்துகளின் விலை மிக அதிகமாக இருப்பதாலும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அவை தேவைப் படுவதாலும், அவற்றை வழங்குவதற்கு நன்கொடையாளர்கள் மிகக் குறைவாக இருப்பதால், இந்த மருந்துகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடல் நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு நோய், மூட்டு நோய்கள் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்துகள் நீண்ட காலமாக தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.