நாட்டில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான தீர்மானத்துக்கு தடை விதிக்குமாறு கோரி ஸ்கொட்லாந்து பிரஜை தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணியான Kayleigh Fraser கடந்த 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
தான் கோட்டா கோ கம போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாகவும், இதன் பின்னர் தனது வீசாவை இடைநிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் குறித்த தீர்மானம் நியாயமற்றது என தீர்ப்பளிக்குமாறு அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்று நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.