கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தது 48 மெகாவாட் எனவும், உச்ச நேரத்திற்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவாட் வரை இருந்தது.
“உச்ச நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவாட்டாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.