நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
நிலவும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவதற்காக வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதியளவு எரிபொருள் இருப்பதாக கூறும் அமைச்சர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கூற்றுக்களை அவர் நிராகரித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டில் மக்களின் பயணத்தை குறைப்பதன் மூலம் எரிபொருள் இருப்பு கட்டுப்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.