சக்திவாய்ந்த புயல்கள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளை தாக்கியதால், 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவிலும், பிரான்ஸ் தீவான கோர்சிகாவிலும் மரங்கள் விழுந்ததில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன.
கனமழை மற்றும் காற்று தீவில் உள்ள முகாம்களை நாசமாக்கியுள்ளது. அதே நேரத்தில் இத்தாலியின் வெனிஸிலும் கனிசமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
புயல்கள், கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வறட்சியைத் தொடர்ந்து வருகின்றன.
கோர்சிகாவில், மணிக்கு 224 கிமீ (140 மைல்) வேகத்தில் வீசிய காற்று மரங்களை வேரோடு பிடுங்கியது மற்றும் மொபைல் வீடுகளை சேதப்படுத்தியது. முகாமில் மரம் விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, ஆஸ்திரியாவில் வீசிய பலத்தக் காற்றினால் மரம் சாய்ந்ததில் 4 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். அதேபோல ஆஸ்திரியாவில் மரத்தில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.