பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு அடுத்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கான, பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின், விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒப்புதலுக்கு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக, இலங்கையின் கடன் வழங்குநர்களின் போதுமன உத்தரவாதங்கள் அவசியமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.