ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில்யில் இடம்பெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு என நியமிக்கப்பட்ட ஆணைக்குழு கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிக்கையை தமிழக அரசாங்கத்திடம் கையளித்தது.
சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்னும் தமிழக அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டது’ என்றும் ‘கலைந்து ஓடிய மக்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்து இருக்கிறார்கள் என்றும் பிரண்ட்லைன் ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் உயர் போலிஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு இருக்கிறார்கள் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக குறித்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி படுகொலை என்பது நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும் என்பதனால் அது தொடர்பான அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தாமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியறுத்தியுள்ளார்.