வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வீதியுலா வந்தனர். மேலும் புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.
அதற்கமைய சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கி முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என்ற புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.