முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் இன்றைய தினம் நாடு திரும்ப மாட்டார் என கூறப்படுகின்றது.
பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இவ்வாறு காலதாமதமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புலனாய்வு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் சென்று திரும்பிய பின்னரே, கோட்டா ராஜபக்ஷ நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பமைச்சரான தாம் இல்லாத நேரம், நாட்டிற்குள் வர வேண்டாமென ரணில் விக்கிரமசிங்க கூறியமை காரணமாகவே அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.