பிரித்தானியா மற்றும் அல்பேனிய அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோரின் வருகையைக் கண்காணிக்க அல்பேனிய பொலிஸார் குழுவொன்று பிரித்தானியா வரவுள்ளது.
சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்வோரை விரைவாக அகற்ற உதவுவதற்காக மூத்த சட்ட அமுலாக்க அதிகாரிகளை பிரித்தானியாவுக்கு அனுப்புவதன் மூலம் அல்பேனியா ஆதரவளிப்பதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அல்பேனிய அதிகாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் ஆதரவு செயலாக்கத்தையும் வழங்குவார்கள் என்று உட்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் கால்வாய்களை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 60 சதவீத பேர் அல்பேனியர்கள் என்று அரசாங்க அதிகாரிகள் நம்புகிறார்கள். இருப்பினும் புள்ளிவிபரங்கள் ஏற்ற இறக்கமாக உள்ளன.
உட்துறைச் செயலர் பிரிதி படேல் மற்றும் அல்பேனியாவின் உட்துறை அமைச்சரான பிளெடி குசி, இந் நிலைமையைப் பற்றி விவாதித்தபோது, அடுத்த வாரம் முதல் பிரித்தானியாவில் இருக்க உரிமை இல்லாத அல்பேனியர்களை அகற்றுவதை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தனர்.
அல்பேனியர்கள் என்று சந்தேகிக்கப்படும் படகில் வரும் புலம்பெயர்ந்தோர் மீதான சோதனைகள் விரைவாக கண்காணிக்கப்படும் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.