ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று(25) சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் நிந்தவூர் கடல் அரிப்பு தொடர்பில் விளக்கியதுடன் இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை அண்டிய துறைமுக நகரத்தை உருவாக்கும் போது பாதிப்புக்கள ஏற்பட்டால் அதை தடுக்க Tetrapods கற்கள் கடந்த காலத்தில் அங்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால் எதிர்பாத்த பாதிப்புக்கள் துறைமுக நகர பணியில் ஏற்படாததால் அங்கு கொண்டுவரப்பட்ட கற்களை
நிந்தவூர் பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச கடற்பகுதிகளுக்கு கொண்டு சென்று கடல் அரிப்பை கட்டுப்படுத்த முடியும் என முஷாரப் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கடல் அரிப்பை தடுப்பதற்காக தீர்மானிக்கப்பட தொகையினை கொண்டு குறித்த கற்களை கப்பலூடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு கொண்டுவரும் அதேவேளை இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினையும் வழங்க முடியும் எனவும் முஷாரப் ஜனாதிபதியின் செயலாளர்களிடம் தெரிவித்தார்.
ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதியின் செயலாளர்கள், தீவிரமடைந்த கடல் அரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கு துறைமுக நகரம் மற்றும் துறைமுகத்தை அண்டியுள்ள உள்ள பகுதிகளில் காணப்படும் Tetrapods கற்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பயன்படுத்த தேவையான சாத்தியப்பாடுகளை நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளனர்.