இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளது.
இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று இரவுசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளால் இடம்பெற்றது.
இந்த நிலையிலேயே, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பாக இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கடன் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த 24ஆம் திகதி நாட்டிற்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் பேச்சுவார்த்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிதியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.