உலக அளவில் புரட்சிக்கு உதாரணமாக திகழ்ந்த மாவீரன் சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா காலமானார்.
60 வயதான கமீலோ சேகுவாரா, வெனிசுவேலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது ஏற்பட்ட தீடிர் மாரடைப்பின் போது, காலமானார்.
கடந்த திங்கட்கிழமை நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கியூபாவின் அரசு செய்தி நிறுவனமான பிரென்சா லத்தினா தெரிவித்துள்ளது.
கமிலோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கியூப ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ‘ஆழ்ந்த வலியுடன், சேகுவேராவின் மகனும் அவரது யோசனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
சேகுவாரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்த கமீலோ சேகுவாராவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புரட்சியாளர், தியாகி, மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்ட சேகுவாராவிற்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3ஆவது மகன் கமிலோ சேகுவேரா ஆவார்.